jokes
அரசியலாய் பந்து வீச்சும் குண்டு வீச்சும்!
தப்பாக பந்து வீசிய ரண்வீருக்கு ஆட்டம் ஆட தடையாம்..!
கொத்து கொத்தாக குண்டுகள் வீசிய ராணுவத்தினருக்கு பதவி உயர்வாம்..!
ரண்வீர் பந்து வீச்சு அவமானமாம்..!
ரஜாபக்ஷேவின் குண்டு வீச்சு அமைதிக்காகவாம்..!
பந்து வீசி ஒட்டு மொத்த அணிக்கே தலைகுனிவாம்...!
தானே போறுப்பு என்கிறார் அணித்தலைவர் சங்ககாரா..!
முப்படைகளின் மூலம் கொடூரமான ஆயுதங்களைப் பயன்படுத்தியதில் பெருமையாம்..!
தமிழினத்தினை அழித்தத பெருமை தனக்கே என்கிறார் ராஜா பக்ஷே!
ஐடியா கொடுத்த தில்ஷானுக்கு சம்பளத்தில் பிடித்தமாம்..!
பசில் ராஜபக்ஷேவுக்கு பாராட்டு மழையாம்..!
விளையாட்டில் இப்படி செய்வதெல்லாம் சகஜம் என்கிறார் சேவாக்..!
கடலில் மீன்பிடிப்பவர்களை சுடுவது ஒன்றும் தவறில்லை என்கிறார்... இந்திய அமைச்சர்!
ரண்வீரைப் பழிக்குத்து சர்வதேச கிரிகெட் உலகம்!
ராஜ பக்ஷேவை எதிர்க்க அஞ்சுது சர்வதேச அரசியல் உலகம்!
இப்படி இருக்குது யதார்த்தம்..!
என்ன இருந்தாலும் கிரிக்கெட் என்பது கனவான்களின் ஆட்டம்தான்!

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home